சுயம்புநாதர் கோவில் குடமுழுக்கு
அரிவேளூர் சுயம்புநாதர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் அரிவேளூர் கிராமத்தில் ஆனந்தவள்ளி சமேத சுயம்புநாதர் கோவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு 85 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று கோவில் கலச கோபுரத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாகசாலை பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் அன்பரசன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.