காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி நடைபயணம் 100 நாட்கள் நிறைவையொட்டி தேன்கனிக்கோட்டையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் 100 நாட்கள் நிறைவடைந்து, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை வரவேற்கும் விதமாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கட்சியினர் தேன்கனிக்கோட்டையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் அப்துர் ரகுமான் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். இதில் தேன்கனிக்கோட்டை நகர தலைவர் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், நிர்வாகிகள் சாக்கப்பா, ஜெயக்குமார், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story