தேவார இன்னிசை நிகழ்ச்சி


தேவார இன்னிசை நிகழ்ச்சி
x

தர்மபுரியில் நடந்த தேவார இன்னிசை நிகழ்ச்சியில் ஏராளமான சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.

தர்மபுரி

தர்மபுரி அப்பர் கையிலாய காட்சிக்குழு மற்றும் தர்மபுரி மாவட்ட சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சுந்தரமூர்த்தி சாமி அருளிய தேவார இன்னிசை மற்றும் அருளாசி வழங்கும் விழா தர்மபுரி ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விழா குழு தலைவர் சூடாமணி தலைமை தாங்கினார். இந்த விழாவையொட்டி அதிகாலை அம்மையப்பன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் அம்மையப்பன் வேள்வி பூஜையும், யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபி திருஞானசம்பந்தர் திருமுறை மடத்தின் சிவநெறி பிரசாரகர் ஸ்ரீ சிவாக்கர தேசிக சாமியின் சுந்தரமூர்த்தி சுவாமி அருளிய தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் பங்கேற்று தேவாரம் பாடினர். பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story