தண்டவாள இணைப்பு பணி - தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்- விருதுநகர், திண்டுக்கல்லுடன் நிறுத்தம்


தண்டவாள இணைப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை


தண்டவாள இணைப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்தில் மாற்றம்

மதுரை-திருமங்கலம் இரட்டை அகலப்பாதையில் தண்டவாள இணைப்பு பணிக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731) இன்று (திங்கட்கிழமை) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16321) மற்றும் மதுரை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06663) இன்று, நாளை, 8-ந் தேதிகளில் விருதுநகருடன் நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த 2 ரெயில்களும் (வ.எண்.16322), (வ.எண்.06664) மேற்கண்ட நாட்களில் விருதுநகரில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.

விழுப்புரம்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16867) மற்றும் கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16721) இன்று, நாளை மற்றும் 8-ந் தேதிகளில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16868) நாளை, 8-ந் தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16722) ரெயில் இன்று, நாளை மற்றும் 8-ந் தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டுக்கல் ரெயில் நிலையம்

புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16730) இன்று மற்றும் நாளை நெல்லையுடன் நிறுத்தப்படும் மறுமார்க்கத்தில் மதுரை-புனலூர் ரெயில் (வ.எண்.16729) இன்று, நாளை மற்றும் 8-ந் தேதிகளில் நெல்லையில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும். சென்னை சென்டிரல்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20601) நாளை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், மதுரை-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20602) நாளை திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16340) இன்று, 7, 8-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும்.

கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22622) நாளை விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் (வ.எண்.22621) இன்று மற்றும் 8-ந் தேதிகளில் மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் செல்லும். தேனி-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.06702) இன்று, நாளை, 8-ந் தேதிகளில் தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு பதிலாக மாலை 6.45 மணிக்கு புறப்படும்.

ரெயில்கள் ரத்து

ராமேசுவரம்-மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06780) இன்று (திங்கட்கிழமை) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. மதுரை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06504) தண்டவாள இணைப்பு பணிகள் முடியும் வரை 14 பெட்டிகளுக்கு பதிலாக 12 பெட்டிகளுடன் மட்டும் இயக்கப்படும்.

திருச்செந்தூர் - பாலக்காடு ரெயில் (வ.எண்.16732), மதுரை - ராமேசுவரம் ரெயில்கள் (வ.எண்.06651/06652, 06653/06654, 06655/06656) இரு மார்க்கங்களிலும், மதுரை - திண்டுக்கல் ரெயில்கள் (வ.எண்.06609/06610) இரு மார்க்கங்களிலும் இன்று முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் (வ.எண்.16731/16732) இரு மார்க்கங்களிலும் நாளை முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தேனி-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.06702) வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரையிலும், மதுரை-தேனி சிறப்பு ரெயில் (வ.எண்.06701) வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் (16343) இன்று கூடல்நகர் ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (16344) இன்று கூடல் நகர் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும்.


Next Story