கோவிலில் ஆய்வு செய்ய சென்றபோது கலெக்டரின் காலணியை கையில் எடுத்துச்சென்ற தபேதார்


கோவிலில் ஆய்வு செய்ய சென்றபோது கலெக்டரின் காலணியை கையில் எடுத்துச்சென்ற தபேதார்
x

கோவிலில் ஆய்வு செய்ய சென்றபோது கலெக்டரின் காலணியை கையில் எடுத்துச்சென்ற தபேதார் சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலாகிறது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 18 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.

இந்த திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்வதற்காக நேற்று கோவிலுக்கு சென்றார்.

அப்போது கோவில் வாசலில் கலெக்டர் ஷ்ரவன்குமார், தனது ஷூவை கழற்றினார். பின்னர் அதனை எடுத்துச்சென்று காரில் வைக்குமாறு தபேதாரிடம் கூறினார். உடனே அவரும் கலெக்டரின் ஷூவை கையில் எடுத்துச்சென்று காரில் வைத்தார். பின்னர் கோவிலில் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்ததும், தபேதார் ஓடிச்சென்று காரில் இருந்த ஷூவை எடுத்து வந்து கலெக்டரின் கால் அருகில் வைத்தார். உடனே கலெக்டர், அதனை காலில் போட்டுக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story