அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மேஜை, இருக்கைகள்

அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மேஜை, இருக்கைகள்
x

வாணியம்பாடி அருகே அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மேஜை, இருக்கைகளை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மேஜை, இருக்கைகளை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார.

வாணியம்பாடியை அடுத்த சிக்னாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான இருக்கைகள் மற்றும் மேஜைகளை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சாம்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் சவுந்தர், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story