கிருஷ்ணகிரியில்தேக்வாண்டோ தேர்வு போட்டி


கிருஷ்ணகிரியில்தேக்வாண்டோ தேர்வு போட்டி
x
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள், விளையாட்டு பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் வீரர்-வீராங்கனைகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தேக்வாண்டோ வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர். தேர்வு போட்டியை திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, விளையாட்டு வீரர் மாதையன், தேக்வாண்டா பயிற்றுனர்கள் சங்கர், பரணிதேவி, இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story