நெல் கொள்முதல் நிலையம் அமைய உள்ள இடங்களில் தாசில்தார் ஆய்வு
தா.பழுரில் நெல் கொள்முதல் நிலையம் அமைய உள்ள இடங்களில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ள இடங்களில் ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான இடவசதி குறித்தும், நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் குறித்தும், மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து விடாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் மாவட்ட நெல் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தா.பழூர் வருவாய் ஆய்வாளர் தமிழரசன், நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story