தலைஞாயிறு பேரூராட்சி முதலிடம்


தலைஞாயிறு பேரூராட்சி முதலிடம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தூய்மை நகரங்கள் பட்டியலில் தலைஞாயிறு பேரூராட்சி முதலிடம் பிடித்தது

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தூய்மை இந்தியா திட்டம் செயல்பாடு தொடர்பாக மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் ஆண்டு தோறும் இந்திய நகரங்களில் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.நடப்பு 2022 -ம் ஆண்டு நடைபெற்ற தூய்மை நகர கணக்கெடுப்பு முடிவினை ஜனாதிபதி டெல்லியில் அறிவித்துள்ளார். இதில் இந்திய நகரங்களில் 15,000 மக்கள் தொகைக்கு குறைவான சிறிய நகரங்கள் பிரிவில் தலைஞாயிறு பேரூராட்சி தமிழ்நாட்டில் முதலிடமும், தென் இந்திய அளவில் 9-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு நாகை மாவட்ட கலெக்டர்அருண்தம்புராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆகியோர் தலை ஞாயிறு பேரூராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தலைஞாயிறு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச் செல்வி பிச்சையன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன்,தலைஞாயிறு பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் அகிலாமற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் அலமேலு,அறிவு நிலா, சுகிர்தா மற்றும் கணினி இயக்குபவர் சவுந்தர் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது.


Next Story