தையல் கடையில் தீ விபத்து


தையல் கடையில் தீ விபத்து
x

குடியாத்தத்தில் தையல் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமாயின.

வேலூர்


குடியாத்தத்தை அடுத்த காளியம்மன்பட்டி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் வேலாயுதம். தையல் கடை வைத்துள்ளார். இங்கு ஏராளமான மாணவர்கள் பள்ளி சீருடைகளை தைக்க கொடுத்திருந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு அருகிலுள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவு நேரத்தில் கடையிலிருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வேலாயுதத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் சென்று பார்த்தபோது கடையில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அதற்குள் கடையில் இருந்த 3 தையல் எந்திரங்கள், பள்ளி மாணவர்களின் சீருடைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான தாகக்கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நேற்று காலையில் குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் உள்ளிட்டோரும் நேரில் பார்வையிட்டனர்.


Next Story