என்னை சிறைக்கு அழைத்துச்செல்லுங்கள் சார்... போலீசாரிடம் அடம்பிடித்த மதுபிரியர்..!


என்னை சிறைக்கு அழைத்துச்செல்லுங்கள் சார்... போலீசாரிடம் அடம்பிடித்த மதுபிரியர்..!
x

தாம்பரத்தில் மதுபிரியர் ஒருவர், போலீசாரிடம் தன்னை சிறைக்கு அழைத்துச்செல்லும்படி வற்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை,

சென்னை அடுத்த தாம்பரத்தில் மதுபிரியர் ஒருவர், தன்னை சிறைக்கு அழைத்துச்செல்லும்படி வற்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாம்பரம், கன்னடபாளையம் சாலையில் உள்ள மதுபான கடையில் மதுபிரியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் மதுபிரியர் ஒருவர், தான் சிறைக்கு சென்றதே இல்லை என்றும், அதனால் தன்னை சிறக்கு அழைத்துச்செல்லுங்கள் சார் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

சிறை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவேண்டும் என போலீசாரிடம் மதுபிரியர் ஒருவர் மதுபோதையில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story