பிளஸ்-1 தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து மானாமதுரை மாணவர் சாதனை


பிளஸ்-1 தேர்வில்  தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து  மானாமதுரை மாணவர் சாதனை
x

பிளஸ்-1 தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து மானாமதுரை மாணவர் சாதனை

சிவகங்கை

மானாமதுரை

பிளஸ்-1 பொதுத்தேர்வில் மானாமதுரையை சேர்ந்த மாணவர் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.

மானாமதுைர மாணவர்

பிளஸ்-1 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 8-வது இடத்தை பிடித்தது. மாவட்ட தேர்ச்சி சதவீதம் 93.92 ஆகும்.

இந்த மாவட்டத்தில் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரசாந்த், பிளஸ்-1 பொதுத்ேதர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவரை தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியைகள் மீனாள், மீனாட்சி, மீனா மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் வாங்குவது அரிதானது. இந்த சாதனையை நிகழ்த்திய மாணவர் பிரசாந்த் கூறியதாவது:-

என் தந்தை பூமிநாதன், கத்தார் நாட்டில் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். எனக்கு ஒரு தங்கை உள்ளார். தற்போது 11-ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளேன். பிளஸ்-2 தேர்விலும் இதே போல் தமிழில் முழு மதிப்பெண் பெற முயற்சிப்பேன்.

வழிகாட்டியாக ஆசிரியர்

சிறு வயது முதல் தமிழ் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. தமிழ் மனப்பாட பகுதி மட்டுமின்றி, அதில் உள்ள அனைத்து பாடங்கள், இலக்கணங்களை படித்து அறிந்து, பிழை இல்லாமல் எழுதிப்பழகினேன்.

இதற்கு தமிழாசிரியை மீனாள் வழிகாட்டியாக இருந்தார். தலைமை ஆசிரியரும் எனக்கு ஊக்கம் அளித்தார். அதன் காரணமாக 100-க்கு 100 மதிப்பெண் பெற முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story