தாளவாடி, ஆசனூர் போலீஸ் நிலையங்களில்போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


தாளவாடி, ஆசனூர் போலீஸ் நிலையங்களில்போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஈரோடு

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேற்று மாலை தாளவாடி மற்றும் ஆசனூர் போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது கோப்புகளை ஆய்வு செய்துவிட்டு பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது சத்தி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்


Next Story