திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்


திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:30 AM IST (Updated: 21 Jun 2023 3:45 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்ட அளவில் மாணவ- மாணவியர்கள் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருகிற 30-ந்தேதிக்குள்(வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். பிரான்ஸில் நாட்டில் உள்ள லியான் நகரில் வருகின்ற செப்டம்பர் மாதம் 2024-ம் ஆண்டு சர்வதேச திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க வசதியாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு tnskills@naanmudhalvan.in வலைதளத்தினை பார்வையிடலாம்.10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 7-ந் தேதி ஆகும். மேலும் விபரங்களுக்கு 9442215972 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story