தாளூர் சோதனைச்சாவடியை சீரமைக்க வேண்டும்


தாளூர் சோதனைச்சாவடியை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:16:37+05:30)

தாளூர் சோதனைச்சாவடியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூரில் இருந்து சேரம்பாடி, கையுன்னி, எருமாடு வழியாக சுல்தான்பத்தேரிக்கு சாலை செல்கிறது. அப்பகுதியில் தாளூர் சோதனைச்சாவடி கேரள மாநிலத்தையொட்டி உள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கழிப்பறையின் செப்டிக் டேங்க் உடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. அதன் அருகே உள்ள வருவாய்த்துறை கட்டிடமும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, சோதனைச்சாவடியை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story