144 பேருக்கு தமிழ் சாதனையாளர் விருது
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் 144 பேருக்கு தமிழ் சாதனையாளர் விருது செந்தில்குமார் எம்.எல்.ஏ.வழங்கினார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அனைத்திந்திய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஆவடிக்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தராஜன், விஜயகுமார், புலவர் சீத்தா, நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பழனிவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சங்கத்தின் மாநில தலைவர் ஆவடிக்குமார் ஆகியோர் புதியதாக எழுதிய திசை எண் ஒன்பது, மனமும் மழலைபேசும் ஆகிய புத்தகங்களை வெளியிட்டனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 144 தமிழ் சான்றோர்களுக்கு தமிழ் சாதனையாளர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அய்யாமோகன், கோமுகிமணியன், துணைத்தலைவர் வளர்மதிச்செல்வி, செயலாளர் கார்த்திகேயன், இணைச்செயலாளர் சண்முகப்பிச்சைபிள்ளை, தியாகதுருகம் பிரபு, நிறைமதி, அம்மா தமிழ்ப்பீடம் செயலாளர் சுகந்தீனா, சரளா ஆறுமுகம் மற்றும் தமிழ்ச்சங்க சான்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் நிறைமதி நன்றி கூறினார்.