தமிழ் தேச மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ் தேச மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் ஒன்றிய அரசின் சனாதான காவி அரசியலை எதிர்த்து தமிழ் தேச மக்கள் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் அம்பிகாவதி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன், பாண்டியன், கென்னடி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசிற்கு எதிரான கோஷங்கள் முன்வைக்கப்பட்டது. கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும். பெரிய கடை வீதி சாலையை சீரமைக்க வேண்டும். கந்தர்வகோட்டைக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story