தமிழ் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு நிகழ்ச்சி


தமிழ் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு நிகழ்ச்சி
x

தமிழ் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட செய்திகள்

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வங்கிகள் சார்பில், கல்விக்கடன் மற்றும் தொழில் முனைவோர்க்கான பயிற்சி திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள் இடம்பெற்று இருந்தன.

மேலும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பு இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்கள், போட்டித் தேர்வு தொடர்பான நூல்கள், இணையதள தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில், மாணவர்கள் கல்வி பயிலும் போதே தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான திறனை குறுகிய கால பயிற்சிகளை இலவசமாக அரசு வழங்கும் முதல்-அமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் தொடர்பான அரங்குகள் இடம் பெற்று இருந்தன. இதேேபால் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் கண்காட்சி அரங்குகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் இடம் பெற்று இருந்தன. இதனை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் நந்தலாலா, அரசு அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story