தமிழ் பேரரசு கட்சியினர் போராட்டம்


தமிழ் பேரரசு கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தமிழ் பேரரசு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ்ப் பேரரசு கட்சியினர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

திட்டங்குளம் கிராமத்தில் அரசிடம் முறையான அனுமதி பெறாமல், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், தனிநபர் ஒருவர் சந்தையினை அமைத்து நடத்தி வருகிறார். அந்த சந்தையை மூடுவதற்கு அரசு உயர் அதிகாரிகளும், நீதிமன்றமும் உத்தரவிட்டும் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அதை நிறைவேற்றாத தை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story