தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 May 2022 7:55 PM IST (Updated: 29 May 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று திடீரென அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று புதிதாக 14 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 32 பேரும், சென்னையில் 30 பேரும் உள்பட 8 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 30 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

11 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளது. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை.தமிழகத்தில் 73-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.

41 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 814 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்"இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story