தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி


தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு:தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி:பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருவாரூர்

மன்னார்குடி:

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

காவிரி உரிமை மீட்பதற்காக 50 ஆண்டு காலம் போராடி காவிரி மேலாண்மை ஆணையம் பெறப்பட்டது. கர்நாடகம் தண்ணீர் தர முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் வரம்பு என்ன என்பதை கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு உணர்த்தி உள்ளது. இது தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டிற்கு விடுவிக்கும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டிருந்தாலும், பற்றாக்குறை காலத்திலும் உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என்கிற உத்தரவாதத்தை ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறோம். தமிழ்நாடு அரசு இனியாவது உரிய முறையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்பதற்கான தொடர் முயற்சிகளை சட்டப்படி மேற்கொள்ள வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story