மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

தமிழ்நாடு விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் சாமி தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாக கூறி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story