தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம்


தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியிலுள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாநில பொருளாளர் பெருமாள், மாநிலத் துணைத் தலைவர் ரவீந்திரன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், அனைத்து வேளாண்மை பொருட்களுக்கும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி உற்பத்தி செலவு ஒன்றரை மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். பருவமழை பொய்த்ததால் கருகி வரும் மானாவாரி பயிர்களுக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story