தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷனை கைது செய்யக்கோரி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம், மாநில துணை தலைவர் செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story