தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
x

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

கரூர்

கரூரில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 12-வது மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள், வன பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி அறிவித்துள்ளதுபோல், மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story