ஜெயலலிதா மரணம் விவகாரம்: சசிகலா உட்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு


ஜெயலலிதா மரணம் விவகாரம்: சசிகலா உட்பட  8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு
x

ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் , ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்பட 8 பேர் மீது ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story