ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது-  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x

மக்கள் நலன் கருதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்ககூடாது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமகுடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திலும், ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் டெல்டா மாவட்டத்திற்கு வெளியில் இருந்தாலும், இத்திட்டத்தால் பொதுவாக விவசாய நிலங்களும், சுற்றுசூழலும் இதனால் பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.ஆகவே ஓ.எம்.ஜி.சி நிறுவனத்திற்கு, தமிழக அரசும் சுற்றுசூழல்துறையும், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் நலன் கருதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்ககூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story