தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் சார்பில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள புறநகர் கிளை முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஷாஜகான் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில நிர்வாகிகள் பெருமாள், கார்த்திகேயன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நீலமேகம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், அனைத்து ஓய்வு கால பலன்களையும் ஓய்வு பெறும் அன்றே வழங்கிட வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர்களை போன்று மருத்துவ காப்பீடு மூலம் மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும், மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு சம்பளம், ஒப்படைப்பு தொகைகளை புதிய சம்பள விகிதபடி மாற்றி அமைத்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story