தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்: நாராயணசாமி


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்: நாராயணசாமி
x

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: தமிழக சட்டபேரைவில் நடைபெற்ற நிகழ்வு அனைவரைக்கும் தலைகுனியும் செயலாகும். சிறந்த தலைவர்கள் கவர்னராக இருந்துள்ளனர். ஆர்.என்.ரவி கவனராக பொறுப்பேற்று தமிழக அரசின் திட்டங்களையும், தமிழக அரசையும் வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அரசியலமைப்புக்கு முரணாகவும், சட்டமன்ற மாண்புகளை குலைக்கும் விதமாக செயல்பட்டுள்ளார். இந்தியாவில் இதுபோன்று எந்த மாநிலத்திலும் ஜனநாயக படுகொலை மற்றும் சட்டமன்ற அவமதிப்பு நடந்ததில்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி, கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.


Next Story