தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்-தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்-தொல்.திருமாவளவன் பேட்டி
x

தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தொல்.திருமாவளவன் பேட்டியளித்தார்.

மதுரை


மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக கவர்னர், அமைச்சர் செந்தில் பாலாஜியை துறையில்லாத அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கியதற்கும், பின்னர் அவற்றை நிறுத்தி வைப்பதாகவும் கூறியுள்ளார். அவர் கவர்னராக பதவி ஏற்ற நாள் முதல் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதும், திரும்ப பெறுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத கவர்னர் ரவியை, திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசிற்கு தமிழக முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் வலியுறுத்துகிறேன். மணிப்பூர் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் தமிழக கவர்னர் நடவடிக்கை குறித்தும் கலந்தாய்வு செய்ய முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில நிர்வாகி அய்யங்காளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story