தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்


தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்
x

தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

திருச்சி

புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளனூர் இளங்கோவன் தலைமை தாங்கினார். புள்ளம்பாடி வடக்கு ஒன்றியசெயலாளர் செல்வராசா, பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மாவட்டசெயலாளர் வைரமணி, தலைமைகழக பேச்சாளர் செங்குட்டுவன் ஆகியோர் தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன்ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் பத்மா மருதை, கல்லக்குடி நகர செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பால்துரை, புள்ளம்பாடி பேரூராட்சிதலைவர் ஆலீஸ்செல்வராணி ஜோசப் செல்வராஜ், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் சண்முகம், பெரியசாமி, எலியாஸ், ஆலம்பாடி முருகன், கே.ஆர்.குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புள்ளம்பாடி நகர செயலாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார்.புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ராமர் நன்றி கூறினார்.


Next Story