டாஸ்மாக் வருவாயை நம்பி தான் தமிழக அரசு செயல்படுகிறது: அண்ணாமலை விமர்சனம்


டாஸ்மாக் வருவாயை நம்பி தான் தமிழக அரசு செயல்படுகிறது: அண்ணாமலை விமர்சனம்
x
தினத்தந்தி 23 July 2023 12:19 PM IST (Updated: 23 July 2023 12:28 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசினார்.

செங்கல்பட்டு

மேகதாட்டு அணை விவகாரம், அனைவருக்கும் பெண்கள் உரிமைத் தொகை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, அத்தியாவசியப் பொருட்கள், மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவை தொடர்பாகவும், திமுகவைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் காரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:- தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது இன்னும் உறுதியாகவில்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பி தான் தமிழக அரசு செயல்படுகிறது" என்றார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை, " முற்றிலும் முரண்பாடான கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளனர்" என்றார்.


Next Story