தெள்ளாரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்


தெள்ளாரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
x

தெள்ளாரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில பொது செயலாளர் இரா.சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ப.செல்வன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் அ.அப்துல்காதர், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சத்தியவாடி, ஊத்துக்குளம் கிராமங்களில் அரைகுறையாக கட்டி விடப்பட்டுள்ள பழங்குடியினருக்கான தொகுப்பு வீடுகளை விரைந்து கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இதில் நிர்வாகிகள் ச.ரேணுகா, ந.ராதாகிருஷ்ணன், ஏழுமலை, கி.பால்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story