தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது என்று நல்லதம்பி எம்.எல்.ஏ. பேசினார்.
கந்திலி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆதியூர் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வக்கீல் கே.ஏ.குணசேகரன் தலைமை தாங்கினார். டி.சுந்தரம், செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.குமாரசாமி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் கே.மறைமலை, நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பேசுகையில், கடந்த 2 ஆண்டில் தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அனைத்து துறையிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது என்றார்.
ஒன்றிய செயலாளர் வக்கீல் கே.ஏ.குணசேகரன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத்தலைவர் ஜி.மோகன்குமார், ஒன்றிய கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.தசரதன், அவைத்தலைவர் எம்.கே.ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதிகள் டி.ஆர்வவில், என்.சக்கரவர்த்தி, எஸ்.சசிகுமார், துணை செயலாளர்கள் எஸ்.மாது, எம்.சண்முகம், எஸ்.தீபா, ஒன்றிய கவுன்சிலர் கே.எம்.சக்கரை, பி.தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நித்தியானந்தம், சண்முகம் மேனகா, விவேகானந்தன் குமார், லட்சுமி கார்த்திகேயன், எஸ்.பி.சக்திவேல் ஸ்டாலின், டி.மணி, வி.சீனிவாசன், கே.தசரதன், பி.கணேசன், டி.அன்பு உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ.பி.பழனிவேல் நன்றி கூறினார்.