வழக்குகளை விரைந்து முடிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதுஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு


வழக்குகளை விரைந்து முடிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதுஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
x

வழக்குகளை விரைந்து முடிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.

திருச்சி

வழக்குகளை விரைந்து முடிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.

ஆண்டு விழா

திருச்சி வக்கீல்கள் சங்க 133-வது ஆண்டு விழா நேற்று திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜேஷ் கண்ணா வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, திருச்சி மாவட்ட தலைமை நீதிபதி பாபு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.

விழாவில் ஐகோர்டடு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசும்போது, திருச்சி வக்கீல்கள் சங்கம் 1889-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோர்ட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்து வருகிறது. வழக்குகளை விரைந்து முடிப்பதில் இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. மேலும் வக்கீல்கள் தங்களது வழக்குகளை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு விவாதிக்காமல் சுருக்கமாக விவாதித்து முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதனை மூத்த வக்கீல்களிடம் இருந்த கற்று கொள்ள வேண்டும் என்றார்.

சாதனையாளர் விருது

பின்னர் அவர் மூத்த வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். முன்னதாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், வக்கீல்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story