இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது  - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோவை, பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியின் பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்

கோவை

கோவை, பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியின் பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.இதில் உரையாற்றிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;

எல்லோருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகவே பிஎஸ்ஜி கல்லூரி விழாவை பார்க்கிறேன்.இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது .தலைசிறந்த 100 கல்லூரிகளில் 31 நிறுவனம் தமிழகத்தில் உள்ளது .அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வியை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது - முதல்வர்

போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்க வேண்டும். போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாணவிகள் சிலரும் போதை பழக்கத்திற்கு அடிமையானது கவலை அளிக்கிறது இவ்வாறு கூறினார்.


Next Story