உற்பத்தியில் தெற்காசியாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உற்பத்தியில் தெற்காசியாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 Jun 2022 6:14 AM GMT (Updated: 2022-06-24T11:45:31+05:30)

சென்னை, தரமணி டைடல் பார்க்கில் உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,

தொழில்துறை சார்பில் நடைபெறும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது சென்னை, தரமணி டைடல் பார்க்கில் உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தை அவர் திறந்து வைத்தார் .ரூ .212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை அவர் திறந்து வைத்தார்.

மேலும் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.77 கோடியில் அமையவுள்ள டைடல் பூங்காக்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ 33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் புத்தாக்க மையங்களை திறந்துவைத்தார்.

அதன் பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;

"எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. .உற்பத்தியில் தெற்காசியாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொழில்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என அவர் கூறினார்.


Next Story