மேலப்புலம் புதூர் ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு


மேலப்புலம் புதூர் ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு
x

மேலப்புலம் புதூர் ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புலம் புதூர் ஊராட்சியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ஆகியவை பழுதடைந்துள்ளது. அதனை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டித் தர கோரிக்கை மனு வரப்பெற்றதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு நேற்று ஆய்வு செய்தது. மனுக்்கள் குழு தலைவர் கோவி. செழியன் தலைமையில் கைத்தறி மற்றும் துணிகள் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சட்ட பேரவை செயலாளர் சீனிவாசன், சட்டமன்ற மனுக்கள் குழு உறுப்பினர்கள் கிரி, மதியழகன், பிரபாகரராஜா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முனிரத்தினம், ஈஸ்வரப்பன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், திட்ட இயக்குனர் லோகநாயகி உடன் இருந்தனர்.


Next Story