தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டம்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு


தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டம்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டத்தில் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்றாா்.

கடலூர்


நெய்வேலி,

நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள தண்ணீர் வசதி, சாலை, தெருவிளக்குகள், பஸ் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து, பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, மேலும் கட்சி வளர்ச்சி மற்றும் அமைப்புப்பணிகள் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் உ. கண்ணன், தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞரணி தலைவர் ஜெரோம் குமார், தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து மற்றும் மாநிலத்தை சேர்ந்த கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story