தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
x

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே உள்ள பஸ் நிறுத்தம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது 4 பெண்கள் நீதி தேவதை போன்று வேடமணிந்து கையில் தராசுடன் நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story