தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மல்லி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில தலைவர் முத்துலட்சுமி வீரப்பன் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதில் வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story