தக்கலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்


தக்கலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
x

தக்கலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

தக்கலை:

சமூகநீதியை பாதுகாத்திடவும், சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க அரசை வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பத்மநாபபுரம் தொகுதி தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் நன்மாறன், மாநில அமைப்பு துணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.


Next Story