தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்- மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்- மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பா.ஜ.க.வின் நுபுல் சர்மா மற்றும் நவின் ஜின்டால் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஹசன் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் ஜோசப் நொலாஸ்கோ, த.மு.மு.க மற்றும் ம.ம.க. மாவட்ட தலைவர் ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சி மாநகர செயலாளர் பிரவின் வரவேற்றார். த.மு.மு.க. மாநிலச் செயலாளர் சிவகாசி முஸ்தபா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குல்லு, த.மு.மு.க மாநகர தலைவர் அலி அக்பர், த.மு.மு.க. மாநகர துணை செயலாளர் சம்சுதீன், மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சந்தன ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story