தமிழக மக்கள் முன்னேற்ற கழக கூட்டம்
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் புதிய நிர்வாகிகள் நேர்கானல் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நெல்லையில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், செய்தி தொடர்பாளர் வக்கீல் சண்முகசுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் தேவேந்திர குலவேளாளர் இளைஞர்களை சாதி ரீதியாக கொலை செய்யப்படுவதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story