காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!


காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!
x

அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை,

66-வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்பு திறன் போட்டி, மோப்பநாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 70 பேர் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் கேடயங்களை பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பதக்கங்கள் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பதக்கங்கள் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story