தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
துளசேந்திரபுரத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் துளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கண்ணன், கம்பன், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் சங்கர் வரவேற்றார். மாநில துணைப்பொது செயலாளர் கமலநாதன்.மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சீர்காழி வட்டாரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை சீர் செய்தும், புதிய கட்டிடங்களையும் உடனடியாக கட்டி தர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டார மகளிரணி செயலாளர் சுமதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story