தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் மேற்கு தொடக்கப்பள்ளியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் வட்டார தலைவர் திலகம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சர்தார் முன்னிலை வகித்தார். பொருளாளர் அறிவரசு வரவேற்றார். செயலாளர் குமார் அறிக்கை வாசித்து சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.அ.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வேலு, பிரான்சிஸ்அந்தோணி, ஆரோக்கியதாஸ்ஆகியோர்ஆலோசனை வழங்கி பேசினர். அப்போது வருகிற சென்னையில் வருகிற 10-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஜேக்டோ-ஜியோ மாநில மாநாட்டிற்கு கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திலிருந்து 100 பேருக்கு குறையாமல் பங்கேற்க வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கல்வி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணை தலைவர் விஜயகுமார், துணை செயலாளர் வினோத்குமார் உள்பட பலர் பேசினர். முடிவில் துணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.