தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு


தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Next Story