தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநாடு


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநாடு
x

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோமதிசங்கர் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கோட்ட தலைவர் முருகேசபாண்டியன் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில கவுரவத்தலைவர் பரமேசுவரன், மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, ராமமூர்த்தி ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் திரவியம் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் சமஸ்தானம் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனர். மாநில துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி நாயனார் மாநாட்டை நிறைவு செய்து வைத்து பேசினார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி கோட்ட செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story