தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மவுன ஊர்வலம்


தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல் கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் வரை நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நம்பு ராஜேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் மறைந்த லூர்து பிரான்சிஸ் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊர்வலத்தில் 600-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் இறுதியில் மணல் கடத்தல் தொடர்பாக இனிவரும் காலங்களில் தமிழக அரசின் உத்தரவுப்படி மண்டல துணை தாசில்தார் மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story